சுற்றறிக்கை: மனம் குழுவில் இணைந்து செயற்பட விரும்பும் துறை சார் வல்லுநர்களின் அறிஞர்களின் கருத்துகள் பெறுதல் தொடர்பாக

123

சுற்றறிக்கை: மனம் குழுவில் இணைந்து செயற்பட விரும்பும் துறை சார் வல்லுநர்களின் அறிஞர்களின் கருத்துகள் பெறுதல் தொடர்பாக

அன்பார்ந்த உறவுகளே!

அரசின் துறைகளின் நிறை குறைகளை அறியவும்; துறை சீரமைப்பு பற்றி ஆய்வு செய்யவும்; துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்து பெறவேண்டியுள்ளது. எனவே பின்வரும் துறைகளில் அறிவு, அனுபவம், கல்வித் தகுதி உள்ள உறவுகள் தங்களது விவரங்களை manam@naamtamilar.org என்ற மின்னஞ்சலுக்கு அல்லது +91-9344653303 என்ற பகிரி எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

துறைகள்:-

 1. வேளாண்மை
 2. நீரியல் மற்றும் நீர் மேலாண்மை
 3. பாசனம் மற்றும அணைக்கட்டு
 4. பள்ளிக்கல்வி
 5. உயர்கல்வி
 6. மருத்துவத்துறை
 7. சட்டத்துறை
 8. பொருளாதாரம்
 9. தொழிற்துறை (குறு, சிறு, நடு மற்றும் பெருந்தொழில்)
 10. பொதுப்பணி (சாலை அமைப்பு, பராமரிப்பு, அடிப்படை கட்டமைப்புகள்)
 11. சுற்றுலாத் துறை
 12. கனிம வளம்
 13. காவல் நிர்வாகம்
 14. பதிவு மற்றும் வருவாய்துறை
 15. மின்சாரம் உற்பத்தி, அனுப்புதல், பகிர்மானம்
 16. கைத்தறி மற்றும் கைவினைத் தொழில்கள்
 17. வணிக வரி
 18. தொழிற்சாலை மாசு கட்டுப்பாடு
 19. புள்ளியியல்
 20. பட்டயக் கணக்கர்

துறை சார்ந்து தேவையான தகுதிகள்:

 • தொடர்புடைய துறையில் குறிப்பிடும்படியான கல்வித் தகுதி.
 • தொடர்புடைய துறையில் பணி அனுபவம்.
 • தொடர்புடைய துறையில் அரசுத் துறையில் பணியாற்றிய அனுபவம்.
 • தொடர்புடைய துறையில் தொழில் முனைந்த அனுபவம்.
 • தொடர்புடைய துறையில் ஆராய்ச்சி அனுபவம்.
 • தொடர்புடைய துறையில் மேலாண்மை அனுபவம்.

பதிவிடவேண்டிய விவரங்கள்:-

 1. பெயர்
 2. தந்தை பெயர்
 3. உறுப்பினர் எண்
 4. பாலினம்
 5. வயது
 6. கல்வித் தகுதி
 7. பணியாற்றிய துறை மற்றும் அனுபவம் ( சுருக்கமாக )
 8. தொடர்பு முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல்

 

மனம் குழு
நாம் தமிழர் கட்சி

+91-9344653303