சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம்

295

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அலைபேசி கடை வைத்து நடத்தி வந்த ஜெயராசு என்பவரையும், அவரது மகன் பென்னிக்சையும் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு நேரத்தைக் கடந்து கடையை மூட தாமதப்படுத்தியது தொடர்பாகக் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் எனும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது. மக்களைக் காக்கும் பெரும்பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறை அதிகாரிகளே எளிய மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தி அவர்களை விசாரணை எனும் பெயரில் அடித்துத் துன்புறுத்தி சாகச்செய்யும் கொடுஞ்செயலை செய்வது சகிக்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கொரோனா நோய்த்தொற்று அண்டாமல் உயிர்காக்க வேண்டிய காவல்துறையினர் எளிய மனிதர்கள் மீது கோரத்தாக்குதல் தொடுத்து அவர்களை உயிரிழக்கச் செய்வது சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் பச்சைப்படுகொலையாகும். இலஞ்சமும், ஊழலும் ஆட்சியதிகாரத்தின் எல்லா அடுக்குகளிலும் புரையோடிப் போயுள்ள நிலையில் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இருக்கும் இடைவெளியையும், அதிகாரம் எவ்வளவு அந்நியமாகி மக்களைப் பந்தாடுகிறது என்பதையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

இவ்விவகாரத்தில், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சு உயிரிழக்கக் காரணமான காவல்துறை அதிகாரிகளை நிரந்தரமாகப் பணியைவிட்டு நீக்கி அவர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய வேண்டும் எனவும், ஜெயராஜின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Murder Case Should be Filed on those Police Officers who have Unleashed Barbaric Attack till Death on Father-Son Duo of Sathankulam, Thoothukudi District – Seeman Condemns!

It is shocking that Jayaraj and his son Bennix, who ran a mobile shop at Sathankulam, Thoothukudi, was brutally attacked and eventually killed while they were kept in police custody for failing to shut the shop before the said lockdown time on June 19th. I strongly condemn this intolerable act of cruelty perpetrated by the police officers who are supposed to safeguard common people have misused its powers and brutally assaulting them till death, taking them in custody in the name of investigation.

It is an act of gruesome, legally-perpetrated murder by terrible attacks by the police personnel who are supposed to save commoners from Covid-19 infection. It can be learnt that how people are treated badly due to the gap between the power-atrocious people and the working middle-class people at all strata, where corruption and bribery are deeply rooted.

On behalf of the Naam Thamizhar Katchi, I urge the TN Government to involuntarily terminate those police personnel who are responsible for the death of Jayaraj and Bennix and book murder case against them. Also, the TN Government should immediately provide necessary compensation to the family members of the lost ones.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி
அடுத்த செய்திகையூட்டு ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுச்சூழல் பாசறைகளின் பயிற்சி கூட்டம் – சாக்கோட்டை