மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.

61

மாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம்.தொடர்ந்து வழி நடப்போம்.சீமான் அறிக்கை.

இது குறித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக தன்னைத் தானே எரியூட்டிக் கொண்ட மாமனிதன் அப்துல் ரவூப் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.தன் 24 ஆம் வயதில், தன்னையொத்த தமிழ்ச் சொந்தங்கள் ஈழத்தில் இன உரிமைக்காக உயிரைத் துறந்து போராடிக் கொண்டிருக்கையில் அதே உணர்வோடு தன் இன்னுயிரை தீக்குளித்துப் போக்கிய வீரம் செறிந்த நாள் இது.அன்று எந்த நோக்கத்திற்காக அப்துல் ரவூப் தன் இன்னுயிரைப் போக்கினாரோ அதே நோக்கம் இன்று மேலும் மேலும் வலுப்பட்டிருக்கிறது.அன்று அப்துல் ரவூப் உயிர் துறந்த பொழுது தமிழ்நாட்டில் இன எழுச்சி ஏற்பட்டிருந்தால் இன்று ஈழத்தில் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.

அன்று அப்துல் ரவூப் உயிர் துறக்கும் முன், ‘ஈழ மக்களின் துயரம் விரைவில் தீர்க்கப்படாவிட்டால் ஆயிரமாயிரம் அப்துல் ரவூப்கள் எழுவார்கள்’ என்று கூறினார்.இன்று அவரது கூற்றுப்படி தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பல்லாயிரம் முத்துக்குமார்கள் தோன்றி உள்ளார்கள்.இந்த நாளில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி என்னவென்றால் அப்துல் ரவூப் போன்ற மறத்தமிழர்கள் மேற்கொண்ட லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.அதே சமயத்தில் இனியொரு அப்துல்ரவூப்பும் முத்துக்குமாரும் தோன்றாமல் இருப்பது,நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் அந்த நிலையை உருவாக்கும். அவர்களின் தியாகங்கள் ஆண்டுக்கொருமுறை நினைவுகூருவதற்காக மட்டும் அல்ல. அது நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் நெஞ்சிலே எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்..

முந்தைய செய்திராஜபக்சேவின் சிங்கள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பத்து இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.