க.எண்: 2026050197
நாள்: 25.05.2026
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கக் கூட்டம் வருகின்ற வைகாசி 23ஆம் நாள் 06-06-2026 அன்று, மாலை 04 மணியளவில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள சர் பி.டி.தியாகராய அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. பாசறைப்பாணர்
தேனிசை செல்லப்பா நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கக் கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்:
வைகாசி 23 சனிக்கிழமை | 06-06-2026 மாலை 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராய அரங்கம்
சென்னை
—
தி.நகர்
இந்நிகழ்வில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியோடு பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



