ஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி

41

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எட்டு தொகுதிகளும் ஒருங்கிணைந்து பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களை சார்ந்த நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழச் சொந்தங்களுக்கும், மற்றும் சத்தியமங்கலம் புது சாலை பகுதியை சார்ந்த 50 குடும்பங்களை சார்ந்த திருநங்கைகளுக்கும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை நிவாரண பொருட்களாக வழங்கினர் ..இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மா.கி.சீதாலட்சுமி, மாவட்ட பொறுப்பாளர் நித்தியானந்தம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.செழியன் மற்றும் ஈரோடை மாவட்டத்திற்குட்பட்ட எட்டு தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்….