புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி

35
கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர். மக்களின் இக்கொடுந்துயர் துடைக்க அயராது பல நாட்கள் களத்தில் நின்று நிவாரண உதவிகளை வழங்கி அரசுகள் செய்யாததை, எவ்வித அதிகாரத்திலும் இல்லாத நாம் தமிழர் கட்சி செய்து காட்டியது.
 
தற்போது நிவாரணப்பணிகளின் நீட்சியாக வருகிற திசம்பர் 9, 10 ஆகிய இரு நாட்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களில் ‘புயலும் புணரமைப்பும்’ என்கிற செயல்திட்டத்தை முன்வைத்து நேரடியாக களத்திற்கு செல்ல இருப்பதால் அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கொடியாலம் என்ற கிராமத்தை தத்தேடுகிறது அதன் ஊடாக
இந்த கிராமத்தில் நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் (செங்கல்பட்டு மதுராந்தகம் உத்திரமேரூர் செய்யூர்) சேர்ந்த 300 நபர்கள் புணரமைப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். 
முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)
அடுத்த செய்திதிருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! – சீமான்