கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

76

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் தாராபுரத்தில் இருந்து வேதாரண்யத்தில் கடற்கரை அருகில் இருக்கும் கோடியக்கரை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

1.அரிசி – 5 கி
2. து.பருப்பு1/2கி
3.நாப்கின்
4.துண்டு
5.பிஸ்கட்
6.தைலம்
7.லைட்டர்
8.சிறியடார்ச்லைட்
9. 100 மில்லி எண்ணெய்
10. சாம்பார்தூள்
11. பால்பவுடர்
12. மெழுகுவர்த்தி
13.கொசுவர்த்தி
14.ரவை
15.முருக்கு
16. சளி டானிக்,
17.மாத்திரைகள்
18. சோப்புகள்
19. காய்கறிகள்
20.சர்க்கரை
21.உப்பு
22.தக்காளி
23.பூசணிக்காய்கள்
24.மிளகாய் தூள்
25.தீப்பெட்டி
26.தேயிலைத்தூள்
27.குழந்தைகள் பேம்பர்ஸ்
28.வருக்கி
29.போர்வைகள்
30.பற்பசை
31.பூண்டு

இவை அனைத்தும் அடங்கிய 150 பைகள் 150 குடும்பங்களுக்கு உதவும் வகையில் உடுமலை – மடத்துக்குளம் நம்மாழ்வார் குடில் சார்பாக 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மடத்துக்குளம்  உடுமலை  தொகுதியும் , தாராபுரம் தொகுதி சார்பாக 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும்  மொத்தம் 2 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.!!

இவற்றோடு சீலைகள்,பிளீச்சிங் பவுடர், தண்ணீர் போத்தல்கள், மேற்கூரையாக பயன்படுத்த பழைய பதாகைகளும் கொண்டு செல்லப்பட்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.!!

நிவாரணப்பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டு கொடுத்தமைக்கு சூளேசுவரன்பட்டி, உடுமலை – மடத்துக்குளம், தாராபுரம் தொகுதி உறவுகளுக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நன்றி தெரிவித்தனர்.

முந்தைய செய்திமத்திய அரசின் எந்த மோசடிக்கும் துணைபோகாது, எழுவரையும் விடுவிக்க ஆளுநர் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்!  – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅறிவிப்பு: அப்துல் ரவூப் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – பரமக்குடி | மாணவர் பாசறை