கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழர் முன்னணி

36

09-05-2017 கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – கூடலூர் (கம்பம்) | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி

மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்பவும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த “கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம்” இன்று 09-05-2017 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் கூடலூர் (கம்பம்) பகுதியில் நடைபெற்றது. இதில் இறைநெறி இமையவன் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களும் பெருவிழாப் பேருரையாற்றினர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – கூடலூர் (கம்பம்) | வீரத்தமிழர் முன்னணி
அடுத்த செய்திஈழத்தமிழ் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்!