07.07.2016 தினம் ஒரு சிந்தனை – 29 | செந்தமிழன் சீமான்
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன;
மனிதன் எதை எண்ணுகிறானோ அதற்குரியப் பலன் அவனுக்குக் கிட்டும்;
ஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம்…
அவனை ஆகாத செயலைச் செய்யவைக்கக் கூடாது;
அவன் மகிழ்ச்சியடைந்தால் அவனது மகிழ்ச்சி சத்தியத்தின்
வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக்கூடாது;
அவனுக்கு வலிமை இருந்தாலும் அவனுக்கு உரிமையில்லாத
பிறருடைய பொருட்களை அவன் அபகரித்துக்கொள்ளக்கூடாது;
எவன் அநீதியான விசயத்தில் தன் சமூகத்தினருக்கு உதவிபுரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்துகொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப்பிடித்து தொங்கிக்கொண்டிருப்பவனைப் போன்றவனாவான், அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்;
நன்மையின் பால் செயல்படு;
தீமையை விட்டு விலகிக்கொள்;
ஒரு அவையில் இருந்து நீ எழுந்து சென்றபின்னால் மக்கள் உன்னை நற்குணங்களால் நினைவுகூறவேண்டும் என்று நீ விரும்பினால்…
உனக்குள் நற்குணங்களை வளர்த்துக்கொள்;
மக்கள் நீ இல்லாதபோது உன்னைக்குறித்து
எந்த விசயங்களைச் சொல்வதை நீ வெறுக்கின்றாயோ…
அந்த விசயங்களைத் தவிர்த்துக்கொள்;
உன்னால் எந்தச் செயலை செய்ய முடியாது என்று பிறர் சொல்கிறார்களோ…
அந்தச் செயலை செய்து முடிப்பதற்குப் பெயர்தான் சாதனை;
– நபிகள் நாயகம்