பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை நந்தனம்

469

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 58ஆம் ஆண்டு திருநாளையொட்டி இன்று  30-10-2021 சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் திருமகனார் திருவுருவச்சிலைக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிந்தனை மொழிகள்!

தமிழனை யாராலும்
வெல்ல முடியாது நம்மிடையே
உள்ள வஞ்சகம், சூழ்ச்சி,
பொறாமை, பதவி,
பணத்தாசை இவை தான்
நம்மை அடிமையாக்கியதே தவிர
வீரமோ ஆயுதமோ கிடையாது.

மனிதனுக்கு துணிச்சலை
போன்ற உண்மையான
நண்பன் உலகில் வேறு
யாருமில்லை. பிரச்சனைகளை
சந்திக்காமல் வாழ நினைப்பவன்
வாழ தகுதி இல்லாதவன்.

யாவரும் வாழ்க என்று
சொல்லுங்கள்.
ஒழிக என்று சொல்லாதீர்கள்..
நல்லவைகள் வாழ்க என்று
சொன்னால் நீங்கள்
நினைக்கின்ற கெட்டவைகள்
ஒழிய தானே செய்யும்.

உன்னுடைய வீரம் தான்
எதிரியும் புகழும் படியான
நிலையை உருவாக்கும்..
கோழைத்தனம் அவ்வாறு
செய்யாது.

பிரச்சனைகளை சந்திக்காமல்
வாழ நினைப்பவன் வாழ
தகுதியற்றவன்.

பொறுப்புள்ள பெரிய
மனிதர்களை மதித்து
மரியாதை செய்யலாம்..
ஆனால் அவர்கள் பெரியவர்கள்
என்பதற்காக உங்கள் உயிருக்கு
நிகரான கொள்கைகளை
அவர்களுக்கு தியாகம்
செய்யாதீர்கள்.

நான் பேசுவது, எழுதுவது,
சிந்திப்பது, சேவை செய்வது
எல்லாமே என் தேசத்திற்காகவே
எனக்காக அல்ல.

தான் வாழ பதவி தேவை என்று
கருத்துபவர்களிடம் உண்மைக்கு
எதிரானவற்றை தான்
எதிர்பார்க்க முடியும்.

பதவியை ஒரு சேவையாக
கருத்துபவர்களிடமே ஆட்சி
இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் போனால்,
மக்களுக்கு நலன் என்பது
வெறும் கனவு தான்.

எவன் ஒருவன் தன் சாதி
பெயரை முன்னிலைப்படுத்தி
அரசியல் செய்கின்றானோ
அவனே சமுதாயத்தின்
முதல் எதிரி.
எவன் ஒருவன் தன் சாதி
பெயரை முன்னிலைப்படுத்தி
அரசியல் செய்கின்றானோ
அவனே சமுதாயத்தின்
முதல் எதிரி.

சாதிய சிந்தனை கொண்டவன்
அரசியலுக்கு வந்தால்
நாடு நாசமாகி விடும்.
அவன் பாவி. சாதிய எண்ணம்
கொண்டவன் இறைவனை
வழிபடவே தகுதியற்றவன்.

பணம் கொடுத்து வாக்குக்கேட்பவன் பாவி!
பணம் பெற்று வாக்குச்செலுத்துபவன்
தேசத்துரோகி!