தினம் ஒரு சிந்தனை | செய்தி: 11 | 19-06-2016
வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத எந்த இனமும் எழுச்சிபெற முடியாது என்கிறார் ரசிய புரட்சியாளர் லெனின்
வரலாற்றைப் படிக்காதவர்கள் வரலாற்றைப் படைக்கமுடியாது என்கிறார் அண்ணல் அம்பேத்கர்
கடந்தகாலம் தெரியாதவனுக்கு நிகழ்காலம் இல்லை;
நிகழ்காலம் இல்லாதவனுக்கு எதிர்காலமே இல்லை;
வரலாற்றைக் கையிலெடுத்த எல்லா இனங்களும் பாதுகாப்பாக வாழ்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.
இதை உணர்ந்துதான் நமது தலைவர் வரலாற்றைப் படி! வரலாற்றைப் படை! வரலாறாகவே வாழ்! என்கிறார்.
வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது!
தமிழர்கள் நாம் பழம்பெருமை பேசுவது பீற்றிக்கொள்ள அல்ல; நம்மை நாமே போற்றிக்கொள்ள; நம்மை நாமே தேற்றிக்கொள்ள;
எனவே வரலாறு நமக்குப் பழம்பெருமை அல்ல படிப்பினை