நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து பன்னிரண்டு நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் துப்புரவுப்பணி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் பங்கேற்று துப்புரவுப்பணியில் ஈடுபட்டார். அப்போது முழுவதும் சாக்கடையாக மாறிப்போயிருந்த குப்பைகளை சீமான் தனது கட்சியினருடன் இணைந்து துப்புரவு செய்தார். நாளையும் நாம் தமிழர் கட்சியினர் ஜி.எம்.பேட்டையில் துப்புரவுப்பணியில் ஈடுபடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
IMG_5327 _MG_5378 _MG_5534 IMG_5163