பெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்

37

குடிமக்களுள் ஒருவராக இருந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்து படை திரட்டி இந்த தமிழ் மண்ணையும் மக்களையும் காத்த பெரும் புரட்சியாளர் பெருந்தமிழர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு 3.8.15 ஆடி 18 அன்றுநாம் தமிழர் கட்சி ஈரோடை வடக்கு மண்டலத்தின் சார்பில் கவுந்தப்பாடி நான்கு சாலையில் இருந்து பெரியபுலியூர் வழியாக பவானி அந்தியூர் பிரிவு வரை சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் சோதிவேல், நாகராசன், சுரேஷ், தமிழ்செல்வன், ஓவியர் சரவணன், மூர்த்தி, பேபி, பவானி நாகரசு,மா.கி.சீதாலட்சுமி,பேரறிவாளன், செழியன்,ரமேஷ், சிவக்குமார்,வடிவேல் மற்றும் பொதும்மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அய்யா தீரன் சின்னமலை போல அரசியல் பின்புலம் ஏதும் இல்லாமல் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்துள்ள நாம் தமிழர் கட்சியின் லட்சியம் நிச்சயம் வெல்லும். நாம் தமிழர் !!!

முந்தைய செய்திஒட்டுமொத்த சிங்களவனும் கையேந்தி நிற்கும் காலம் வரும்
அடுத்த செய்திபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தடியடி தாக்குதல் காட்டுமிராண்டித்தனம். -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்