தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26ஆவது ஆண்டு நினைவின் 7ம், 8ம் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியில் நடைபெற்றது. தேசியக் கொடியேற்றலுடன் நினைவுச் சுடரேற்றல், மற்றும் மலர்
வணக்கம், அகவணக்கம் என்பனவற்றுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் திலீபனின் தியாகங்களைப் பிரதிபலிக்கும் நடனம், கவிதை, பேச்சு, சிறப்புரை என்பனவும் இடம்பெற்றன. உண்ணா நோன்புக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்படப் பதிவுகளும் திரையிடப்பட்டது. இந்நிகழ்வுகளில் குறித்த நகரங்களில் வாழும் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு – யேர்மனி