பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கவுள்ள நியூசிலாந்து பிரதமர்!

16

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டு, இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவதில்லை என்றும் அம்மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாது விடினும் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் எந்தவொரு தாக்கமும் ஏற்படப்போவதில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ மேலும் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இதுவரையில் இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது சந்தேகமே என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திகனேடிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்க ஒட்டாவாவில் அணிதிரளவுள்ள தமிழர்கள்: – ஒக்டோபர் 28ல் மாபெரும் கூட்டம்
அடுத்த செய்திஇலங்கை குறித்த பா.உறுப்பினர்களின் அறிக்கையை பிரித்தானிய அரசு நிராகரிப்பு!