ஈழத் தோழமை நாள்-பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் அனுசரிப்பு

32

மார்ச் 4
ஈழத் தோழமை நாள்-பெங்களூர் வில்சன் கார்டன் பகுதியில் அனுசரிப்பு
2008 – 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை என்கிற உண்மை, உள்ளத்தை உருக்கும் ஆதாரங்களுடன் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. 12 வயது இளம்பிள்ளையைக் கூட சிங்கள இனவெறியர்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்திருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது உலகு. மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உலகின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கும் இலங்கை, சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க இந்தியா உதவக் கூடாது.

Ø ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கவேண்டும்.

Ø நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் முயற்சிகளைக் கைவிடவேண்டும்.

Ø சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வழிவிடவேண்டும்.

Ø இனப்படுகொலை செய்த இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்.

Ø தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடக்க வழிவகுக்கவேண்டும் .

என்று இந்தியாவை நாம் தமிழர் வலியுறுத்துகிறது

இதை முன்னிட்டு சாந்தி நகர் பேருந்து நிலையம் அருகில் வில்சன் கார்டன் பகுதியில் ராணி சென்னம்மா பூங்கா அருகில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்போராடத்தில் 150 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் தொண்டர்கள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திஇராசபட்சே மீது சர்வதேச விசாரணை கோரி திருவாரூர் விளக்குடியில் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திடெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்