ஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

14

சிறீலங்காவில் நிலமைகள் வழமைக்கு திரும்பும் வரையிலும் தமிழ் மக்கள் நாடுகடத்தப்படுவதை பிரித்தானியா அரசு நிறுத்த வேண்டும் என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் ஆசியா பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளதாவது:

சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்படும் மக்கள் அங்கு சிறீலங்கா அரசின் துன்புறத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால் பிரித்தானியா அரசு தனது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

பெருமளவான தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கான நேரம் இதுவல்ல. சிறீலங்கா அரசை விமர்சிக்கும் மக்களை குறிவைத்து சிறீலங்கா அரசு தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.