நீதிக்கான நடைபயணங்கள்!

28

ஐரோப்பாவின் இரண்டு முனைகளில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நீதிக்கான நடைபயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.எலும்புக்குள்ளாகவும் ஊடுரும் கடும் குளிரும் பனிவீச்சும் நிறைந்த காலநிலைக்குள்ளாக இந்த இரண்டு நடைபயணங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.எமது தாயகத்தின் விடுதலைக்கான நீண்டபயணத்தின் ஒரு அங்கமாக சர்வதேச மனச்சாட்சிகதவுகளை தொடர்ந்து தட்டுவதால் ஏதேனும் ஒரு உரிமை ஒளிக்கீற்று தன்னும் எமது இனத்துமக்களுக்கு கிடைத்துவிட மாட்டாதா என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளம் நிறைந்த உறுதியுடன் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.

நாங்கள் இறுகப்போர்த்துக்கொண்டு கதகதப்பாக்கும் வெப்பகாற்றுகளுக்குள் அறைகளுக்குள் தூங்கி கிடக்கும் இந்த நாட்களிலும் அவர்கள் நடந்துவந்துகொண்டுதானட இருக்கிறார்கள்.

எதிர்ப்படும் கிராமங்களின் மக்களுக்கு தமது தேசம் பறிபோனதையும் இன்ப்படுகொலை ஒன்றை செய்துமுடித்துவிட்டு உலகஅரங்கில் செங்கம்பள வரவேற்புகளுடன் சிங்களஅரச அதிகாரம் நடமாடி திரிவதை அம்பலமாக்கியபடியே அவர்கள் நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள்.

அவர்களை தாண்டியபடியே ஆயிரக்கணக்கான பயணிகள் தமது வாகனங்களில் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அவர்களின் மனதில் ஒரு கேள்வியை இந்த நடைபயணிகள் ஏற்படுத்தி இருப்பார்கள் நிச்சயமாக. ‘ஏன் இவர்கள் இந்த பனிவீசும் கடும் குளிருக்குள் நடக்கிறார்கள்.இவர்கள் ஏந்தி இருக்கும் கொடி எது.இவர்களின் கோரிக்கை எது ‘ என்ற கேள்விகளை நிச்சயமாக இவர்கள் தாம் நடந்த பாதை மருங்கிலும் தூவி இருப்பார்கள்.

இவர்களின் நோக்கம் ஒன்றேதான்.ஈழத்தமிழினம் பறிகொடுத்த இறைமையை,அவர்களின் சுயநிர்ணயஉரிமையை மீட்டெடுப்பதுதான்.

இவர்களுக்கு தெளிவாகவே தெரியும்.நடக்கப்போகின்ற ஜெனீவா மனிதஉரிமை கூட்டத்தொடரின் முடிவில் ஈழத்தமிழினத்துக்கு விடுதலையை தூக்கி தந்துவிடமாட்டார்கள் என்று.
ஆனாலும் விடுதலை மறுக்கப்பட்டு தொடரும் இனப்படுகொலைக்குள்ளும் இனச்சுத்திகரிப்புக்குள்ளும் ஒரு இனம் அழிகின்றது என்ற உண்மை ஏற்கப்படுமானால் அதுவே பெரும் முன்னெழுச்சி இப்போது என்று.

நாம் என்ன செய்யப்போகின்றோம்.

இவர்கள் ஜெனீவாவை அடையும்போது இவர்களுடன் இணைந்து கொள்வோம்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இனப்படுகொலையை,போர்க்குற்றத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பிரேரணைமீதான விவாதத்துக்கு ஆதரவான கையெழுத்துகளை இணையத்தில் போடலாம்.மற்றவர்களையும் போடும்படி சொல்லலாம்.

உங்கள் உங்கள் நாடுகளின் அரசஅமைச்சர்கள்,மனிதஉரிமை அமைப்புகள் என்பனவற்றின் கவனத்துக்கு கொண்டுவரலாம்.
நீதிக்கான நடைபயணத்தில் நடந்துகொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு ஆதரவுகொடுப்போம்.

முந்தைய செய்திவீரத்தாயின் நினைவு நாள்!
அடுத்த செய்திகடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை துவக்க நிகழ்வு – நிழற்படங்கள் மற்றும் காணொளிப்பதிவு இணைப்பு!!