வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்க முடியாது: சிறீலங்கா

16

அனைத்துலக விசாரணைகளுக்கு சிறீலங்கா அரசு ஒத்துழைக்கப்போவதில்லை என்பதுடன் எந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவும் சிறீலங்கா அரசு நடக்கப்போவதில்லை என சிறீலங்கா  அரச அதிகாரி ரஜீவா விஜயசிங்கா தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா படையினர் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான காணொளி ஆவணங்களை பிரித்தானியாவின் சனல் போஃர் நிறுவனம் ஒளிபரப்பியது தொடர்பில் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாம் ஒத்துழைக்கப்போவதில்லை. அதனை நாம் நிராகரிக்கிறோம்.

நாட்டை பிளவு படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சனல் போஃர் நிறுவனம் இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இயங்குவதற்கு நாம் தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சிறீலங்காவின் கொலைக்களம்“ என்ற செய்தி ஆவணத்தை சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய பின்னர் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி

ஈழம் ஈ நியூஸ்

முந்தைய செய்திசட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுக்கரை ஒன்றியம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.
அடுத்த செய்திஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்