சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதை ஐ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதால் சிறீலங்கா அரசு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹவாட் பேர்மன் தெரிவித்துள்ளார்.
ஓபாமாவின் ஜனநாயக கட்சியின் வெளிவிவகார சபையில் பேர்மன் மிகவும் மூத்த உறுப்பினராவார்.
போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது சிறீலங்கா அரசு உடனடியான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதை விடுத்து சிறீலங்கா அரசு அதனை மறைக்க முற்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிய விடுதலைப்புலிகள் மீதும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நீதி விசாரணைகள் நடத்தப்படாது அங்கு இனநல்லிணக்கப்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி
ஈழம் இ நியூஸ்