செந்தமிழன் சீமான் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்

454

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் பத்திரிக்கை நிறுவனத்திற்கு நேற்று ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம் வாசாகங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் புதுக்கோட்டை முத்துக்குமாரை தாமே கொலை செய்ததாகவும் குறிப்பிடுள்ளது. அதுமட்டுமின்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கொலை செய்யப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது, இது குறித்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டுமென மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. தமிழ் முழக்கம் சாகுல் அமீது,அன்புத்தென்னரசன், ஆவல் கணேசன்,அமுதா நம்பி, அரிமா நாதன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தனர்.



முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திதாய் மொழி தினம் சிறப்புரை செந்தமிழன் சீமான் பல்லடம்