[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.

193

புதுக்கோட்டை.முத்துக்குமார் காட்டிய செயல் ஒழுங்குடன் நடந்தமுத்துக்குமார் படுகொலை கண்டன நடந்த கோபி பொதுக்கூட்டம்

தலைமை ஒருங்கிணைப்பாளர்.செந்தமிழன்.சீமான் ஒரு இடத்திற்கு பேசவருகிறார்என்றாலே பரபரப்பும், வேகமும் தமிழகமெங்கும் கூடி வருவதை நாம் கண்கூடாகபார்த்து வருகையில், 22-02-2011 அன்று கோபியில் நடைபெற்ற கூட்டத்திற்கானமுன் ஏற்பாடுகளும் கூட்ட நிகழ்வும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பத்திரிக்கைகளில் பக்கம்பக்கமாக விளம்பரமில்லை., ஆனால்,பட்டிதொட்டியெங்கும் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டம்முழுமைக்கும் நிகழ்ச்சியுடைய பிரச்சாரம் மக்களிடம் ”நாம் தமிழர்” வாகனபிரச்சாரமும், துண்டறிக்கை பிரச்சாரமும், 50-இடங்களில் சுவரெழுத்துபிரச்சாரமும் நடைபெற்றது. வாகன பிரச்சாரம் மேற்கொண்டிருந்ததோழியர்.சீதாலட்சுமி பேச்சைக்கேட்டு, அலுக்குளி பகுதியில் இருந்து மேலும்ஒரு இளம்பெண் குமுதவள்ளி அவர்கள் (அமைப்புக்கு புதியவர்) பிரச்சாரத்தில்இணைந்து கொண்டார். ஈரோடு மாநகர் முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பெண்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை பேசுவது என்பது தந்தைபெரியாரின்மண்ணில் பெரியாரின் கனவு நனவானது என்ற எண்ணமே ஏற்பட்டது. மேலும்,ஈரோடு.சரவணன், குமாரபாளையம்.வெங்கிட்டு, தாராபுரம்.அழகப்பன் ஆகியோரும்கூட்ட பிரச்சாரத்தோடு, ஈரோடு மாவட்டம் முழுவதும்  அமைப்புஅறிமுகக்கூட்டங்களை நடத்தினர்.
இப்பிரச்சாரங்களின் விளைவுகளை கண்கூடாக பார்க்கவும் முடிந்தது.சுவரெழுத்தை பார்த்து ஒரு தமிழ் உணர்வாளர் கோபி செழியனை அழைத்துஉரு.5,000 நன்கொடை வழங்கியது ஒரு எடுத்துக்காட்டு.
ஈரோடு மகளிரணி சார்பாக பொதுக்கூட்ட அழைப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்ட தோழர்கள் அவர்களுக்கென்று வழங்கப்பட்ட பணியை எவ்விடத்திலும்தொய்வில்லாமல், சோர்வில்லாமல் கரங்கோர்த்து செயல்பட்டது நேர்த்தியிலும்நேர்த்தி.கூட்டத்தில் தண்ணீர் வழங்க தனி ஏற்பாடு, தற்காலிக கழிவறை என ஒவ்வொருசெயலும் பாராட்டத்தான் வேண்டும்.இதுவரை கோபி-பெரியார் திடலில் பொதுக்கூட்டம் நடந்து நிறைந்ததில்லை.ஆனால், நம் கூட்டத்தில் திடல் நிறைந்து மக்கள் சாலையிலும், மாடிகளிலும்நின்று செவிமடுத்தனர். குடும்பம், குடும்பமாக மக்கள் வந்திருந்ததும்,இரவு 11-மணிக்கு மேலும் மக்கள் சிதறமால் கூட்டத்தை விரும்பிக்கேட்டதும்சிறப்பம்சம். மாற்று புரட்சிக்கான வித்து ஊண்றப்பட்டதை உணர முடிந்தது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் விடுதலைப்பாடகர்.சமர்பா குமரன் அவர்களின்எழுச்சிப்பாடல் நிகழ்ச்சியும், ஆதித்தமிழர் மாணவர் கலைக்குழுவின்பறையாட்ட நிகழ்ச்சியும் மக்களை மேடையை நோக்கி ஈர்த்து வந்ததோடு, மக்களின்சிந்தனையை துாண்டியது.
பேரறிவாளனின் விடுதலை ஆயுதம் ”துாக்குகொட்டடியிலிருந்து ஒரு மடல்” நுாலைசெந்தமிழன்.சீமான் வெளியிட பால்நியுமன் பெற்றுக்கொண்டார்.பொதுக்கூட்டத்தில் இந்நுால் பரபரப்பான விற்பனையில் இருந்தது.

அற்புதம் அம்மாவின் பேரறிவாளனின் விடுதலை அழைப்பும், பால்நியுமனின்இனப்படுகொலை ஆதாரங்களும், சத்தியமூர்த்தியின் சத்தியவார்த்தைகளும் மக்கள்செவிக்குணவாக ஏற்று உணவு மறந்து, உணர்வு ஏற்றனர் என்றால் மிகையில்லை.
இந்த வருமானம் காக்கும் இனமானம் என்ற அறிவிப்போடு வந்த உண்டியலில் வசூலானதொகை உரு.30,485.
செந்தமிழன்.சீமான் உரையாற்ற துவங்கியபோது மணி இரவு 9.30. அவருக்கென்றுஉள்ள தனிச்சிறப்பு அமைதியாக பேச்சு துவங்கும். எங்கிருந்து பொங்கிபிராவகம் எடுக்குமென்று தெரியாது உள்ளே உள்ள அண்ணனின் நினைவுகள்,மக்களின் கதறல்கள், துரோகிகளின் வஞ்சகங்கள் அனைத்தும் பூட்டி வைத்தஎரிமலையின் வாயில் திறந்து போல மளமளவென்று பற்றிப்படர ஆரம்பித்த போது மணி9.45.
அதற்கு பிறகு, மக்களின் தமிழுணர்வு ஆவேசம் திடலில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
வானுயர எழுந்து நின்ற தலைவரின் படம் அருகில் இருந்தாலோ என்னவோ, சீமான்அவர்களின் பேச்சின் திட்டமிட்ட தாக்குதல்கள், எதிரிகளின் கூடாரத்தைஎரித்து அழித்துக் கொண்டே இருந்தது.

11.20-க்கு கூட்டம் முடிந்தது. மக்கள் கலைந்தனர்., உணர்வு கலையாமல்!
களமாடிய போராளிகள்-நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்.செயராசு-கோபி.செழியன்முன்னின்று ஒருங்கிணைத்தார்கள்.

சுவரெழுத்து பணிஅர்ஜீன், செந்தில், இலக்கிய ஓவியக்கூடம்பதாகை மற்றும்

சுவரொட்டிப் பணிராசா, சுந்தர், மூர்த்தி, உமாசங்கர், விசயசங்கர்வரவேற்பு பணிகூகலுார்.பாரதி, சீனிவாசன்

மேடை பொறுப்புவெள்ளாங்கோவில்.சுரேசு, மூர்த்தி, உமாசங்கர், விசயசங்கர்பாதுகாப்பு பணிசுந்தர், மூர்த்தி, ஜபருல்லா

ஒலி, ஒளி அமைப்புசெல்வம் ஒலிபெருக்கியகம்காணொளி மற்றும்

நிழல்படம்விசய் நிழற்படக்கூடம்வாகனப்பரப்புரைவெள்ளகோவில்.கோபால், ஈரோடு.மோகன், ஈரோடு.சுப்பிரமணி, ஈரோடு.சரவணன்,கணபதிபாளையம்.வடிவேல், ஈரோடு லோகு, வேட்டைக்காரன் கோவில்.குமரேசன்,இளந்தமிழர்.அஜீத், ஈரோடு.ராசா, சக்தி.விவேக், சக்தி.ஜனகரத்தினம்,அலுக்குளி.செந்தில், அலுக்குளி.அர்ஜீன்,

வாகன ஓட்டுனர்சிவக்குமார்நன்கொடை பணிஈரோடு-திருநாவுக்கரசு, லோகு, சரவணன், மஞ்சள்மண்டி.சிவக்குமார், கேபிள்சுந்தர், நாகராசு, சுப்பிரமணியம், ராசா.கோபி- சுந்தர், விசயசங்கர், மூர்த்தி, ஆறுமுகம், குமரேசன், மாரிமுத்து,சக்தி-விவேக், சாக்ரடீஸ், ஆறுமுகம், முருகன், கார்த்தி, ஜனகரத்தினம்புளியம்பட்டி-ஜோதிமணி.

முந்தைய செய்தி[காணொளி இணைப்பு] 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தாய் மொழி தின சிறப்பு பொதுகூட்டம்.
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்