[படங்கள் இணைப்பு] பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.

29

பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.

தேசத்தின் பேரன்னைக்கு தாயகத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேவேளை பிரித்தானியத் தமிழர்களாலும் இறுதிவணக்கம் செலுத்தப்பட்டது.

லண்டன் ஈலிங் ரவுண் ஹோல் “பிறின்ஸ் மண்டபத்தில்” (22.02.2011) மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன்மைச் சுடர்ரேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் முதன்மைச் சுடரை மாவீரர் குடும்பத்தை சேர்ந்த திருமதி. சண்முகசுந்தரம் ( லெப்.கேணல் பாமா மற்றும் லெப். வெங்கடேஸ் ஆகிய மாவீரர்களின் தாயார்) அவர்கள் ஏற்றிவைத்தார்.

அடுத்து “தேசத்தின் பேரன்னை” க்கான ஈகைச்சுடரினை ஈலிங் நகரசபை உறுப்பினர்களின் தலைவர் திரு. யூலியன் பெல் (Mr.Julian Bell – Leader of Ealing Councilors) அவர்கள் ஏற்றிவைக்க, “தேசத்தின் பேரன்னை” திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா அவர்களின் உறவினர் திருமதி. இந்திராணி அவர்கள் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினை அணிவித்தார். அதைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு நகரசபை உறுப்பினர்களான Mr.Ranjith Dheer, Mr.Surinder Varma, Mr.Pada, Mr.Mohamed Cowsher, Mr.Thaya Idaikadar, Mr.Suresh Krishna, Mrs.Sasikala Suresh ஆகியோர் வருகைதந்து “தேசத்தின் பேரன்னைக்கு” மலர்வணக்கம் செலுத்தி தமது இரங்கற் செய்திகளையும் மக்களோடு பகிர்ந்து சென்றனர்.

முந்தைய செய்திதமிழ் தேசிய உணர்வாளரும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு