தமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

88

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை அனுபவிக்க அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பாதுகாப்பை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர் நலன் என்ற அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்திய பிரதமர் மற்றும் இலங்கை பிரதமர் ஆகியோர் இடையே 1974 ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட உரிமைகளை, (கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமை உட்பட) இலங்கை கடற்படையினர் அனுபவித்து வருகின்றனர். ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இனவெறி கடற்ப்படையால் கொலை செய்யப்படும் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படும் மீன் பிடி தொழில் நட்டம ஏற்ப்படுதியும்  வருகின்றனர்.

எனவே, இலங்கை கடற்படையின் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிய இந்திய கடலோர பாதுகாப்புப் படை மீது விசாரணை நடத்த உயர்நீதி மன்றம்  நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். 1974 ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி கிடைக்கும் உரிமையை அனுபவிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

மீனவர் நலன் தொடர்பாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த 2 மனுக்களையும் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

இவ்வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இலங்கை கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது என்பதை மனுதாரரின் வக்கீலே ஒப்புக் கொள்கிறார். எனவே அந்த கோரிக்கையை நீதிமன்றம்  ஏற்க முடியாது. எனவே அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

2 நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மீன் பிடிக்கும் உரிமைகளையும் அமல்படுத்த வேண்டுமென்று மனுதாரர் கோரியிருக்கிறார். இந்த 2 மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள், இந்தியா இலங்கை நாடுகளின் உறவு சம்பந்தப்பட்டது.

இந்த பிரச்சினைகள் பற்றி இந்த நீதிமன்றம் ஆராய முடியாது. எனவே மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] பிரித்தானியத் தமிழர்களின் பேரெழுச்சியுடன் “தேசத்தின் பேரன்னைக்கு” இறுதிவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது.
அடுத்த செய்திதிருப்பி அடிப்பேன்! – சீமான் பாகம் – 18