நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் – குமரி மாவட்டச் சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தம்பி பீட்டர் ஜோசப் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையின் சுற்றுச்சூழல் பாசறையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றி வந்த தம்பி பீட்டர் ஜோசப் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி பீட்டர் ஜோசப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி பீட்டர் ஜோசப் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



