நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, பச்சை கோட்டையைச் சேர்ந்த பொறுப்பாளர் அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்களின் தாயார் அம்மா கோ.புஷ்பம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி சிலம்பரசன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கோ.புஷ்பம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



