நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும், செந்தமிழர் பாசறை அமீரகம் – சேவை மையப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி இரா.முருகன், இரா.ஆண்டியப்பன், இரா.செந்தில்குமார் அவர்களின் தந்தை ஐயா இராமையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி இரா.முருகன், இரா.ஆண்டியப்பன், இரா.செந்தில்குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராமையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



