அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடிய சௌமியா அன்புமணி தலைமையிலான பாமகவினர் கைது: திமுக அரசின் கொடுங்கோல்போக்கு! – சீமான் கண்டனம்

20

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டுப் போராட்டம் செய்வதற்குத் தடைவிதித்து அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையிலான பாமகவினரைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடுவதற்கே அனுமதி மறுப்பதும், துண்டறிக்கை கொடுப்போரைக்கூட கைதுசெய்து ஒடுக்குவதுமான இச்செயல்பாடுகள் யாவும் ஏற்கவே முடியாத பாசிசப்போக்காகும்.

கடந்தகாலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டங்களை எல்லாம் தன்வயப்படுத்தி, அதனை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்து வாக்கரசியலில் இலாபமீட்டிய திமுக, ஆளுங்கட்சியானதும் எதிர்க்கட்சிகளை முற்றாகப் போராடவிடாமல் முடக்குவதும், அரச வன்முறைகளை ஏவிவிடுவதும் சனநாயகத்துரோகமாகும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஎழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்த ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ நூல் வெளியீடு! – சீமான் சிறப்புரை
அடுத்த செய்தி‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ – நூல் வெளியீட்டு விழா!