நாம் தமிழர் கட்சியின் தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த உணர்வாளர் அன்புத்தம்பி சத்யா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஆனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் வேதனையடைந்தேன்.
போற்றி வளர்த்த பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி சத்யா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ஆனந்தன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


