ஆங்கிலேயர்களிடம் நாடு அடிமைப்பட்டு கிடந்தபோது தாயக விடுதலைக்கு போராடிய தகைமையாளர்..!
"நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன்; இசுலாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி" என்று இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கிய மாமனிதர்..!
பிரிவினையின்போது விருப்பமுள்ள இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய அரசு கூறியபோது, நாங்கள் இந்த மண்ணின் மக்கள், நாங்கள் ஏன் வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று எதிர் கேள்வி எழுப்பிய பெருமகன்.,!
உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று முகமது அலி ஜின்னா கூறியபோது, ‘ஜின்னா அவர்களே, எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம். எங்களின் பாதுகாவலுக்கு இந்தியா என்ற நாடு உண்டு’ என்று நம்பிக்கையுடன் கூறிய பெருவீரர்..!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சிகளை தலைவராக வழிநடத்திய பெருந்தகை..!
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், 20 ஆண்டுகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்று ஏற்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்து பொதுவாழ்வில் தூய பெருவாழ்வு வாழ்ந்த
நம்முடைய தாத்தா கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!



