நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம், 2023

78

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2023 அன்று மாலை 04 மணியளவில் சோழிங்கநல்லூரில், கிழக்கு கடற்கரை இணைப்பு சாலை அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் பேரெழிச்சியாக நடைபெற்றது.