அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம் (இரண்டாம்கட்டப் பயணத் திட்டம் 05-07-2023 முதல் 10-07-2023 வரை)

191

க.எண்: 2023070275

நாள்: 02.07.2023

அறிவிப்பு:

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம்
(இரண்டாம்கட்டப் பயணத் திட்டம் 05-07-2023 முதல் 10-07-2023 வரை)

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற 05-07-2023 அன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள், உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார்.

05-07-2023 அன்று 10-07-2023 வரையிலான இரண்டாம்கட்டப் பயணத்திட்டம் பின்வருமாறு;

நாள் நேரம் நிகழ்வுகள் தொகுதிகள்
05-07-2023 காலை
10 மணி
தேனி மாவட்டக் கலந்தாய்வு

இடம்: எம்.ஜி.எஸ். ரெசிடென்சி, பழைய பேருந்து நிலையம் அருகில், போடிநாயக்கனூர்

ஆண்டிப்பட்டி

பெரியகுளம்

போடி, கம்பம்

மாலை
05 மணி
‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..!’
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: வைகை அணை சாலை, ஆண்டிப்பட்டி
 
06-07-2023 காலை
10 மணி
திண்டுக்கல் மாவட்டக் கலந்தாய்வு 1

இடம்: நரிவிழி அம்மா மண்டபம் (நிகழ்ச்சி அரங்கம்) புரபசனல் கூரியர் எதிரில், நேருஜி நகர், திண்டுக்கல்

திண்டுக்கல்

ஆத்தூர்

நிலக்கோட்டை

 

  மாலை
05 மணி
‘தாயே..! பூமி தாயே..!’ மாபெரும் பொதுக்கூட்டம்

இடம்: கார்த்திக் திரையரங்கு எதிரில்

ஒட்டன்சத்திரம்

07-07-2023 காலை
10 மணி
திண்டுக்கல் மாவட்டக் கலந்தாய்வு 2

இடம்: நரிவிழி அம்மா மண்டபம் (நிகழ்ச்சி அரங்கம்) புரபசனல் கூரியர் எதிரில், நேருஜி நகர், திண்டுக்கல்

பழனி

ஒட்டன்சத்திரம்

வேடச்சந்தூர்

நத்தம்

  மாலை
05 மணி
‘மலை இல்லையேல், மழை இல்லை..!
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: சின்னாளப்பட்டி
 08-07-2023 காலை
10 மணி
புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வு

இடம்: மலர் திருமண மண்டபம்

அறந்தாங்கி

விராலிமலை

ஆலங்குடி

திருமயம்

கந்தர்வக்கோட்டை

அறந்தாங்கி

புதுக்கோட்டை

மாலை
05 மணி
‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சரவேசா!’’
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: விராலிமலை ஒன்றிய அலுவலகம் எதிரில்

விராலிமலை

09-07-2023 காலை
10 மணி
சிவகங்கை மாவட்டக் கலந்தாய்வு

இடம்: சுப்புலட்சுமி மகால், பாண்டியன் திரையரங்கம் அருகில், செக்காலை சாலை, காரைக்குடி

சிவகங்கை

காரைக்குடி

திருப்பத்தூர்

மானாமதுரை

  மாலை
05 மணி
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
மாபெரும் பொதுக்கூட்டம்
இடம்: தேவக்கோட்டை (இராம் நகர்)
 10-07-2023 காலை
10 மணி
இராமநாதபுரம் மாவட்டக் கலந்தாய்வு

இடம்: ஏ.பி.ஷா திருமண மண்டபம். பரமக்குடி (இராமேஸ்வரம் சாலை)

இராமநாதபுரம்

முதுகுளத்தூர்

பரமக்குடி

திருவாடனை

மாலை
05 மணி
‘எங்கள் மண்! எங்கள் உரிமை! மாபெரும் பொதுக்கூட்டம்

இடம்: கீழக்கரை (இராமநாதபுரம்)

மேற்காணும், கலந்தாய்வுகளில் பங்கேற்கும் பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டம் மற்றும் தொகுதியின் கட்சிக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தங்கள் கருத்துகள் / கோரிக்கைகள் / மக்கள் பிரச்சினைகளை விரிவான மனுவாக தயாரித்து கொண்டுவந்து, கலந்தாய்வின் போது நேரில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இனி நடைபெறவிருக்கும் அனைத்துப் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் தவறாமல் நடத்தப்படவேண்டுமெனவும், கூடும் மக்களிடத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான குறும்படிவம் கொடுத்து, அதனை நிரப்பச்செய்து, நிரப்பியப் படிவங்களைச் சேகரித்து, புதிய உறவுகளைக் கட்சியில் இணைக்க வேண்டுமெனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

எனவே, இச்செயற்திட்டத்திற்கு, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திஉறவுகளாய் இணைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம்! – அது நம் இனத்திற்கு வலிமை சேர்க்கும் அரசியல் படைமுகாம்! – சீமான் பேரறிவிப்பு
அடுத்த செய்திஇதுதான் திமுக கட்டிக்காத்த சமூகநீதியா? – சீமான் கண்டனம்