குடிவாரி கணக்கெடுப்பின் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு சீமான் பாராட்டு

299

குடிவாரி கணக்கெடுப்பை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து அதற்காக நிதியும் ஒதுக்கியதன் மூலம் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுத்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் ஐயா நிதிஷ்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

அறுபது ஆண்டுகாலமாகச் சமூகநீதி மண், பெரியார் மண், சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி, சமூகநீதிக் காவலர்கள் என்று தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக்கொண்டு தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட திராவிடக் கட்சிகள், உண்மையான இடப்பங்கீட்டை நடைமுறைப்படுத்தி அனைத்து மக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதற்கான குடிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மறுத்து ஏமாற்றி வருகின்றன.

அவ்வாறெல்லாம் வெற்றுக்கூச்சலும், வெளிவேடமும் இடாத பீகார் மண் குடிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

உண்மையான சமூகநீதிக்காவலர் பீகார் முதல்வர் ஐயா நிதிஷ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Bihar CM Nitish Kumar: A True Champion of Social Justice!

Naam Tamilar Katchi expresses its congratulations and appreciation to the Chief Minister of Bihar, Thiru. Nitish Kumar, for convening an all-party meeting and unanimously passing a resolution favouring a caste-based census and taking the necessary steps to uphold genuine social justice by allocating funds for the same.

For sixty long years, the Dravidian parties, which have alternately ruled Tamil Nadu, branding themselves as champions of social justice, who just talk about self-respect and rationality, have been deceiving Tamil Nadu by refusing to carry out a caste-based census to implement true reservations and allotments and provide equal justice to the people.
It is a matter of great happiness that Bihar, which does not make empty noises and is not hypocritical, unlike Tamil Nadu, has set an example for all the states in the Indian Union by conducting a caste-based census.

My heartfelt congratulations to the chief minister of Bihar, Thiru. Nitish Kumar, a true champion of social justice!

– Senthamizhan Seeman
Chief Coordinator | NTK

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் – வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வர் நினைவேந்தல்
அடுத்த செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா