குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

40

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.08.22) குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியம் சமயசங்கிலி கிராமம் ஆசாரிகாடு கிளையில் தொகுதி தலைவர் திரு.இராஜ்கோபால் அவர்கள் முன்னெடுத்த புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு புரட்சியும் எழுச்சியுமாக நடைபெற்றது.

நிகழ்வினை மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.யுவராணி அவர்கள் தலைமையேற்று மாவட்ட தலைவர் திரு.பொன் சுரேஷ் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க கொடி ஏற்றிவைத்தார். தொகுதி பொறுப்பாளர்கள் செயலாளர் திரு.சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் கார்த்திகன், இணை செயலாளர் திரு.லோகநாதன், பொருளாளர் திரு.ஜெயக்குமார், செய்தி தொடர்பாளர் திரு. ஜீவானந்தன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் திரு.சங்கர், திரு.மகேந்திரன், திரு.இசக்கிமுத்து ஆலாம்பாளையம் பேரூர் பொறுப்பாளர் திரு.பரமேஸ்வரன், பள்ளிபாளையம் நகர பொறுப்பாளர் திரு.சரவணன் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

நன்றி,
நாம் தமிழர்.

இப்படிக்கு,
செய்திபிரிவு,
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி
7010403844

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு