இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய தம்பி சசிக்குமார் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகவும் துடித்துப்போனேன்.
ஓர் ஈடு இணையற்ற களப்போராளி, தொய்வின்றித் தொடர்ந்து உழைக்கக்கூடிய களவீரன். மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் இப்பெரும்பணியில் எனக்கு மட்டுமல்லாது, நாம் தமிழர் எனும் அரசியல் பெரும்படைக்கே தனது துடிப்புமிகு செயல்களால் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தவன்.
சசிக்குமாரைப் போல எல்லோரும் ஈடுபாட்டுடன் வேலை செய்யவேண்டும் என்கிற உந்துதலை எல்லோருக்கும் ஏற்படுத்தக்கூடிய முன்மாதிரியான போராளியை இந்த
இள வயதிலேயே இழந்திருப்பது பெருந்துயரம்.
தம்பி சசிக்குமாரை இழந்து வாடுகின்ற அவர்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எமது நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி