கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119 வது அகவைதின புகழ்வணக்க நிகழ்வு ஆண்டிபட்டியில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலை முன்பாக நாம் தமிழர் கட்சி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் செயக்குமார்,தேனி பாராளுமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் கணேசன்,பேரிடர் மீட்பு பாசறை செயலாளர் விக்னேஷ்பாபு, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் மாரிமுத்து,இணைத்தலைவர் யுவராஜா,ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் வேல்முருகன்,தொகுதி துணைச்செயலாளர் ராசாபழனிச்சாமி,தொகுதி செய்தி தொடர்பாளர் பாலமுருகன்,பாலக்கோம்பை ஊராட்சி செயலாளர் இளையராஜா,தி.சுப்புலாபுரம் ஊராட்சி செயலாளர் சசிக்குமார் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு ஐயாவின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர்.முன்னதாக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.