நாகர்கோவில் தொகுதி – தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு

55

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான பயிற்சி வகுப்பு 17.12.2021, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சமூக ஆர்வலர் திரு.ஜெயின் ஷாஜி அவர்கள், நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்து மிகச் சிறந்த முறையில் அச்சட்டத்தை பற்றிய பயிற்சி வழங்கினார். உறவுகள் பலர் இவ்வகுப்பில் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ஐ பற்றிய விழிப்புணர்வை பெற்றனர். மேலும் தம் தம் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைக்காக, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ஐ எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொண்டனர்.