ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) 20 வருடமாக சிறையில் வாடும் இஸ்லாமியர் & 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

151

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) சார்பாக இஸ்லாமியர் என்பதனாலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டியில் வாடும் நம் உறவுகளின் விடுதலைக்காகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்காகவும் கண்டன ஆர்ப்பாட்டம் சிரிராமபுரம் பேரூராட்சி பேருத்து நிறுத்தம் அருகில் 06.01.2022 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது, நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் உட்பட 50 க்கும் மேற்ப்பட்ட நமது உறவுகளை காவல்துறை கைது செய்து தனியார் அரங்கத்தில் அடைத்தனர், நாம் அதே இடத்தில் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக அரக்கு கூட்டமாக மாற்றினோம் அதில் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்கள் கண்டனஉரை நிகழ்த்தினார்.

நிகழ்வை மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயசுந்தர், பொன் சின்னமாயன் மற்றும் மரிய குணசேகரன் அவர்கள் முன்னிலை வகித்தனர், ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

து.சுப்ரமணி
தொகுதி தலைவர்
8667636446

 

முந்தைய செய்திபட்டுக்கோட்டை தொகுதி ஏழு தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை செய்ய கூறி ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்