தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு – மாவட்ட ஆட்சியாரிடம் மனு

501

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செங்கன்பசுவந்தலவ் கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ புரடக்ட் என்ற தனியார் பால் தொழிற்சாலை. 100 ம் மேற்பட்ட தொழிலாளர்களை வட மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது தொழிற்சாலை நிர்வாகம். இந்த தொழிலாளர் விரோத போக்கு கண்டித்து 80 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனிடையே தொழிலாளர் துறை அலுவலர் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் தொழில் தாவா நிலுவையில் இருக்கும் போது தொழிலாளர்களை பணியிட மாற்றம் செய்வது தவறு என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கும் தொழிற்சாலை நிர்வாகம் கட்டுப்படவில்லை. எனவே தொழிலாளர்கள் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஹட்சன் தொழிலாளர் பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என 09/12/2021 அன்று மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தருமபுரிமாவட்ட பொறுப்பாளர்கள் செந்தில், வழக்கறிஞர் அண்ணாதுரை பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆனந்தன், வெ.திருநீலகண்டன், பரத்குமார், குமார் தருமபுரி தொகுதி பொறுப்பாளர்கள் நேதாஜி, சந்தோஷ் ,சிவக்குமார் அதிகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்ற தொகுதி -நெல் ஜெயராமன் நினைவேந்தல்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்