சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு

48

சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு நவம்பர் 7, 2021 காலை 9.30 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி சுக்கிரவார்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது.

கலந்தாய்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1. சிவகாசி தொகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாசறை ஒன்றிய செயலாளர்கள் அவ்வொன்றிய நிகழ்வுகளை முன்னெடுக்க வலியுறுத்தப்பட்டது.

2. ஒன்றியத்தின் கிளைச் செயலாளர்கள் அவர்களின் கிளையில் உள்ள நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

3. சுற்றுச்சூழல் பாசறையை வலுப்படுத்த ஒன்றிய செயலாளர்களும் கிளைச் செயலாளர்களும் அவர்கள் பகுதியில் உள்ள உறவுகளை பாசறையில் இணைத்து நிகழ்வுகளில் களப்பணியில் ஈடுபடுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

4. நாம் தமிழர் கட்சியை அனைத்து கிராமங்களிலும் கொண்டு சேர்க்கும் விதமாக அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்ற உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு கலந்தாய்வை நிறைவு செய்யப்பட்டது.

மேலும் பாசறை சார்பாக நடைபெறும் நிகழ்வுகளுக்கு அனைத்து உறவுகளும் அவர்களால் இயன்ற நிதி பங்களிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

பின்பு ஆனைக்குட்டம் அணையின் மதகுகளை பார்வையிடப்பட்டது. அணையின் மதகுகள் இன்று வரை அதே பழையநிலைமையில் தான் நீடிக்கிறது. அதற்கு, அப்பகுதி மக்களுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆயுதமாகியுள்ளோம்.

 

முந்தைய செய்திசிவகாசி சட்டமன்ற தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி பனை விதைகள் நடும் பணி