பெரம்பலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

80

பருவமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனை மாவட்ட நிர்வாகம் முறையாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் குன்னம் தொகுதி செயலாளர் இராஜோக்கியம் மற்றும் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் மனு அளித்தனர், இந்நிகழ்வின் போது  பெரம்பலூர் தொகுதி தலைவர் முருகேசன் மற்றும்   மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் கீர்த்திவாசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.