கடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவரின் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

47

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும்,ராசிவ் கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடையநல்லூரில் நேற்று முன்தினம் வரை ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு அனுமதி வழங்கி விட்டு நேற்று காவல்துறை திடீரென ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து நமது உறவுகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கோவை இசுலாமிய மற்றும் 7 தமிழர் விடுதலைக்கான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்பே நாம்தமிழர் புலிகளை காவல்துறை கைது செய்தது.கைது செய்யும் போதும் கண்டன முழக்கத்துடன் கைதாகினர்.

நீங்கள் கைது செய்தாலும், கைது செய்யாவிட்டாலும், நீங்கள் அனுமதித்தாலும், அனுமதிக்க விட்டாலும், நாம் தமிழர் பிள்ளைகளின் போர்க்குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்..!

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை – செயலாளர் முகம்மது யாஸிர் 7845103488 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி.