பெரம்பலூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக மாபெரும் பேச்சுப்போட்டி

95

அண்ணன் சீமான் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு 08.11.2021 அன்று பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக சிறுவர் சிறுமியருக்கு இணையதளம் வாயிலாக மாபெரும் பேச்சுப் போட்டி தமிழின் சிறப்புகள் என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் கட்சி சார்ந்த /சாராத சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டு தங்களின் திறமையிலான பங்களிப்பை அளித்தனர். பங்கு பெற்ற அனைவருக்கும் ரூ. 500 வீதம் பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த பரிசு தொகையினை தகவல் தொழில்நுட்ப பாசறையின் செயலாளர் அசோக்குமார் அவர்கள் வழங்கினார். இந்த பரிசுகளை கடந்த 21.11.21 அன்று நடைபெற்ற குருதிக்கொடை முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்பித்த திருச்சி மாநகர ,மாவட்டச் செயலாளர் பிரபு அவர்களின் கரங்களால் சிறுவர் சிறுமியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றிய, பாசறை, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு :

1.அசோக்குமார்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
+91 90253 54415

2.வீ.சத்தியசீலன்
தொகுதி செய்தித் தொடர்பாளர்
9047196175

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்தி20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? – சீமான் கண்டனம்