குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட சிந்தலவாடி, கே.பேட்டை, வதியம், மருதூர் பகுதிகளில் மணல் குவாரி அமைக்கப்பட உள்ளதாக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக அள்ளப்பட்டதால் ஆற்று வளம் சீரழிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மேற்கண்ட இடங்களில் மீண்டும் மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம் சார்பில் குளித்தலை கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சேபணை மனு செவ்வாய்க்கிழமை (9-11-2021) அளிக்கப்பட்டது.