கும்பகோணம் தொகுதி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு

31

(12/11/21) அன்று கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்தும்,பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் கழிவுநீர் வழிந்து சாலைகளில் தேங்கி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் குறித்தும்,சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கைப்பற்றி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு ச.சாமிநாதன் அவர்கள் தலைமையில் நகராட்சி ஆணையர் திரு நவேந்திரன் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உடன் மாவட்ட தலைவர் திரு இரா.இராஜ்குமார்,மாவட்ட பொருளாளர் திரு லெ.கண்ணன்,தொகுதி செயலாளர் திரு மோ.ஆனந்த்,தொகுதி செய்தி தொடர்பாளர் திரு அ.சேக் முகம்மது,இளைஞர் பாசறை பொறுப்பாளர் திரு.ராம்பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809