திரையிசைப்பாடலாசிரியர் பிறைசூடன் மறைவு தமிழ்த்திரையுலகத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம்

95

எண்ணற்ற இன்னிசைப்பாடல்களால் மக்களின் மனங்களை மகிழச்செய்த திரையிசைப்பாடலாசிரியரும், கவிஞருமான ஐயா பிறைசூடன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

எளிய மொழி நடையில் திரையிசைப் பாடல்களை மனம் கவரும் வகையில் வடித்துத்தந்த மாபெரும் வித்தகர் ஐயா பிறைசூடன் ஆவார். தனக்கென திரையுலகில் தனியிடத்தைப் பிடித்து, காலங்கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல்களை இயற்றிய ஐயா பிறைசூடன் அவர்கள், மிகச்சிறந்த தமிழறிஞராகவும் திகழ்ந்தார். அவருடைய மறைவு தமிழ்த்திரையுலகத்திற்கே ஏற்பட்டிருக்கிற பேரிழப்பாகும்.

ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி