அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக

206

க.எண்: 2021100232
நாள்: 09.10.2021

அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக

தமிழர் பாரம்பரிய வீரக்கலைகளை மீட்டு, அடுத்த தலைமுறையினருக்கு முறையாக கற்பித்து, வளர்த்தெடுக்கும் நோக்கிலும், கலை பத்தில் தலைசிறந்த, திசை எட்டும் புகழ்கொண்ட தமிழ்ப் பெரும்பாட்டன் வீர இராவணன் பெரும்புகழைப் பறைசாற்றும் வகையிலும், நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கட்சிப் பாசறைகளில் ஒன்றாக தொடங்கப்படவிருக்கும் தமிழர் வீரக்கலைப் பாசறையின் தொடக்கவிழா, வருகின்ற 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அமைந்துள்ள பெருமாள் திருமண மண்டபத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி