குமரி கனிமவளக்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைவு வழக்கில் கைது! – வழக்குகளிலிருந்து மீண்டுவர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்

2184

க.எண்: 2021100233
நாள்: 11.10.2021

செய்திக்குறிப்பு:

தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று (10-10-2021) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது.

‘சாட்டை’ துரைமுருகனை தற்போதையச் சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத்தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில், அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டுவரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணைநிற்கும் எனத் தெரியப்படுத்துகிறோம். 

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திஅறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக
அடுத்த செய்திஅறிவிப்பு: அக். 13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம்  – சென்னை