அறிவிப்பு: அக். 13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம்  – சென்னை

214

க.எண்: 2021000234
நாள்: 11.10.2021

அறிவிப்பு: பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம்  

தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வருகின்ற 13-10-2021 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு, நாம் தமிழர் கட்சி நடத்தும் நினைவு கருத்தரங்கம் சென்னை, விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கே.கே.நகர் அசோக் பார்க் இன் அரங்கத்தில் நடைபெறவிருக்கின்றது.

கருத்துரை வழங்குபவர்கள் :

தமிழ்த்திரு. பெ.மணியரசன் –  தலைவர்,  தமிழ்த்தேசிய பேரியக்கம்

தமிழ்த்திரு. பேராசிரியர் வேணு  – நாகா மக்கள் இயக்கம், நாகாலாந்து

தமிழ்த்திரு. பரம்ஜித் சிங் காசி – ஊடகவியலாளர், சீக் சியாசத், பஞ்சாப்

தமிழ்த்திரு. பதால் கன்யா ஜமாத்தியா – திரிபுரா மக்கள் முன்னணி, திரிபுரா

தமிழ்த்திரு. பரம்ஜித் மன்ட்  – தல் கல்சா, பஞ்சாப்

தமிழ்த்திரு. செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இக்கருத்தரங்க நிகழ்வில்  கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகளும் பேரெழுச்சியோடு பெருந்திரளாக தவறாது பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.   .

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி