அறிவிப்பு: பனைச்சந்தை – 2021 | அக்டோபர் 16, 17 இரண்டு நாட்கள் – நந்தம்பாக்கம் (சென்னை) | சுற்றுச்சூழல் பாசறை

248

உறவுகளுக்கு வணக்கம்!

நமது சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை – 2021, வரும் அக்டோபர் 16 மற்றும் 17ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மிகப்பெரும் நிகழ்வாக நடக்க இருக்கிறது.

தமிழகமெங்கிலுமிருந்து வரவிருக்கும் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் பங்கெடுக்கும் இப்பெருநிகழ்வு, பனைசார் பொருட்களின் விற்பனை அங்காடிகள், பனையின் பலவிதமான பயன்கள் குறித்த விளக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாக அமையவிருக்கிறது. விற்பனையாளர்கள், நுகர்வோர் அனைவருக்கும் அனுமதி இலவசம்.

இதன்மூலம் பனையின் முக்கியத்துவம் குறித்தும், சிறப்புகள் குறித்தும் பனைசார் வாழ்வியலைக் கொண்டவர்களின் நிலையைக் குறித்தும் உலகுக்கு எடுத்துச்சென்று அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்யவிருக்கிறோம்.

இந்த பனைச்சந்தையில் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தல், பனையால் நாமும் நம்மால் பனையும் வாழ வழி செய்யும் தலைசிறந்த தொடக்கமாக அமையும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.

இடம் : ஐ.டி.பி.எல். மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி (IDPL MHS), கருமாரியம்மன் கோவில் தெரு, ஐ.டி.பி.எல். காலனி, துளசிங்கபுரம், நந்தம்பாக்கம், சென்னை-600089.

நாள் : அக். 16 & 17 • நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.

முந்தைய செய்திவேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் – சீமான் வலியுறுத்தல்